Tuesday, December 22, 2009

எனக்கு பிடித்த அமெரிக்கா!!

அமெரிக்காவில் வாழும் நாம், நமது கலாசார முரண்பாடு உடையவர்களின் மத்தியில் வாழ்கிறோம். கண்டிப்பாக இந்த கலாச்சாரம் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது தான். ஆனால், இங்கு உள்ள சொகுசு வாழ்க்கையில் எனக்கு பிடித்த சில விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன். இது என்றைக்கு (ஆவது) இந்தியாவில் அமையும் (மா) ?
1. உள் கட்டமைப்பு (Infrastructure) - போக்குவரத்து முறை, சாலை வசதி, விரைவுச்சாலை முறை (highway systems), வியாபார அல்லது வர்த்தக நிலையம் (shops and malls), etc .,
2 . குழந்தைகளிடம் அன்பாக நடந்துகொள்ளும் முறை, குறிப்பாக பள்ளிகளில், மருத்துவமனைகளில்
3 . மக்கள் காவல்துறை மீதும் மற்றும் காவல்துறையினர் மக்கள் மீதும் மதிப்பும் மரியாதையும் ஒழுக்கமும்
4 . சைரன் உடன் வரும் ஆம்புலன்ஸ், தீயனைப்பு அல்லது காவல்துறை வண்டிக்கு ஒதுங்கி வழி விடும் பண்பு (சட்டத்துக்கு பயந்து கூட இருக்கலாம்)
5 . இன்சூரன்ஸ் (கார் இன்சூரன்ஸ், மெடிக்கல் இன்சூரன்ஸ்)
6 . யார் எவர் என்றல்லாம் பார்க்காமல், ஹலோ சொல்வது, புன்னகை செய்வது, கதவை திறந்து அடுத்தவருக்கு வழி விடுவது, ...மனிதாபிமானம்
7 . பதவியின் அதிகாரம் காண்பிக்காமல் சக ஊழியர்களுடன் பாரபட்சம் இன்றி பழகுவது
8 . கஸ்டமர் கேர் சேவையில் மிக பண்புடன் பேசுவது
9 . தபால் / கூரியர் சர்வீஸ்

இப்படி பல விஷயங்களை சொல்லலாம், இதில் குறையும் உண்டு, ஆனால் அது மிக குறைவு (நல்லதை மட்டும் எடுத்து கொள்வோம்). இதில் சில இந்தியாவிலும் உண்டு, ஆனால் நிறைய விஷயங்களை சரி செய்ய வேண்டி உள்ளது.

இதே போன்ற நல்ல விசயங்களோட இந்திய கலாச்சாரம் (பழைய) சேர்ந்தால், இந்தியா எப்படி இருக்கும்?? நடக்குமா ?? பார்க்கலாம்!!!

8 comments:

Unmaivirumpi said...
This comment has been removed by the author.
சின்னப் பையன் said...

யெஸ்... இப்போ கமெண்ட் போடமுடியுது...

சின்னப் பையன் said...

இன்னும் ஒரு பாயிண்ட் சேர்த்து உருண்டையா ஆக்கி இருக்கலாம்...

அன்புடன் அருணா said...

இதைச் சரி செய்ய எங்கிருந்து ஆரம்பிக்கவேண்டுமென்று எப்போதும் போல் முழித்துக் கொண்டிருக்கும் பலரில் நானும் ஒருத்தி.

Anonymous said...

கட்டுரை நன்றாக இருக்கிறது.இன்னும் விரிவாக அடுத்த பதிவில் எழுதுங்கள்.உணவு முறை பற்றி எதிர்பார்க்கிறேன்..இதை இன்னும் 3 பதிவாக எழுதலாம்..வாழ்த்துக்கள் சார்

Anonymous said...

பதவியின் அதிகாரம் காண்பிக்காமல் சக ஊழியர்களுடன் பாரபட்சம் இன்றி பழகுவது//
ம்ஹிம்..இதெல்லாம் நம்ம ஊர்ல நினைச்சு கூட பார்க்க முடியாது

Unmaivirumpi said...

அன்புடன் அருணா அவர்களுக்கு,
ஆமாம் நம் கனவு ஒரு நாள் நினைவாகும், நன்றி வருகை தந்தமைக்கு.

Unmaivirumpi said...

ஆர்.கே.சதீஷ்குமார் அவர்களுக்கு நன்றி, உணவில் நம் நாடு உணவு தாங்க, இங்க கிடைக்கிற ரொட்டி துண்டு எல்லாம் ரொம்ப நாளைக்கு தாக்கு பிடிக்காது

Post a Comment