Friday, January 7, 2011

அந்த புரோக்கர் பய இங்க தானே வரேன்னு சொன்னான்



மேல உள்ள காமெடில வடிவேலு சொல்றா மாதிரி நானும் ஒருநாள் இங்கே (அமெரிக்காவில) காத்திருந்தேன். கொஞ்ச நேரத்தில வந்து, வாங்க உள்ளே போய் பேசலாம்னு சொல்லி கூட்டிட்டு போனார். உள்ளே போய் பாத்திட்டு நான் முகம் சுழிக்கிறத பாத்து, காசு வேணும்னா கொஞ்ச கம்மி பண்ணிகோங்கோன்னு சொன்னார். கொஞ்ச கூட கவர்ச்சியா இல்ல, அதனால நேரடியாவே சொல்லிட்டேன். இது ரொம்ப அட்டா இருக்கு, வேற எதாவது இருந்தா சொல்லுங்களேன்னேன்  . அவர் இப்போதைக்கு கைவசம் எதுவும் இல்ல, மார்க்கெட்ல புதுசா எதாவது வந்தா சொல்றேன்னு சொல்லிட்டு போய்ட்டார். 

எனக்கு வெறி அடங்கல, சரி வலைதளத்தில தேடுவோம்னு தேடினேன். ஒரு பொம்பள புரோக்கர் (அமெரிக்காவில இதெல்லாம் சகஜம்) நம்பர் கிடைச்சது. சில போட்டோவும் இருந்தது,  அதுல பாத்ததில சூப்பரா ஒன்னு இருந்தது, உடனே போன் போட்டு அப்பாயின்ட்மன்ட் பிக்ஸ் பண்ணிட்டேன். சொன்ன நேரத்தில கரெக்ட்டா போயிட்டேன். புரோக்கர் ஒரு பொம்பள ஆச்சே, கொஞ்ச நமக்கு ஏற்ற டேஸ்ட்டா இருக்கும்ன்னு நம்பி போனேன். பார்க்க பளபளன்னு இருந்தாலும் ஒன்னும் விசேஷமா இல்லை. எனக்கு பிடிக்கலைன்னு சொல்லி வெளில வந்துட்டேன். அவர் என்ன விடல, சரியான கிராக்கி ஒன்னு சிக்கிருக்குன்னு நினைச்சி, இன்னும் நிறைய எடத்துக்கு கூட்டிட்டு போய் காண்பிச்சாங்க. நான் எதுவும் பிடிக்கலைன்னு சொன்னதும், மேல கீழே பாத்திட்டு மனசுக்குள்ள உனக்கெல்லாம் ... திட்றது தெரிஞ்சது.

இப்படி நான் பல புரோக்கரை வச்சி பல மேட்டர பார்த்தேன், ஒன்னும் சரியாவே மாட்டல. இப்போல்லாம் நான் புரோக்கர் கிட்ட பேசினாலே, இவன் சும்மா வந்து பாத்திட்டு சரி இல்லைன்னு சொல்லுவான்னு அவங்களுக்குள்ள பேசிகிட்டாங்க போல, போன் பண்ணினா ஒரு மரியாதையே இல்ல. 

எப்போ தான் நான் தேடற எல்லாமே அம்சமா இருக்குற, சும்மா நச்சுன்னு, நான் நினைக்கிற காசுல, சும்மா சூப்பரா, நல்ல வசதியா, ரெண்டு பெட்ரூம் இருக்குற வீடு கிடைக்குமோ!!