Tuesday, December 22, 2009

எனக்கு பிடித்த அமெரிக்கா!!

அமெரிக்காவில் வாழும் நாம், நமது கலாசார முரண்பாடு உடையவர்களின் மத்தியில் வாழ்கிறோம். கண்டிப்பாக இந்த கலாச்சாரம் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது தான். ஆனால், இங்கு உள்ள சொகுசு வாழ்க்கையில் எனக்கு பிடித்த சில விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன். இது என்றைக்கு (ஆவது) இந்தியாவில் அமையும் (மா) ?
1. உள் கட்டமைப்பு (Infrastructure) - போக்குவரத்து முறை, சாலை வசதி, விரைவுச்சாலை முறை (highway systems), வியாபார அல்லது வர்த்தக நிலையம் (shops and malls), etc .,
2 . குழந்தைகளிடம் அன்பாக நடந்துகொள்ளும் முறை, குறிப்பாக பள்ளிகளில், மருத்துவமனைகளில்
3 . மக்கள் காவல்துறை மீதும் மற்றும் காவல்துறையினர் மக்கள் மீதும் மதிப்பும் மரியாதையும் ஒழுக்கமும்
4 . சைரன் உடன் வரும் ஆம்புலன்ஸ், தீயனைப்பு அல்லது காவல்துறை வண்டிக்கு ஒதுங்கி வழி விடும் பண்பு (சட்டத்துக்கு பயந்து கூட இருக்கலாம்)
5 . இன்சூரன்ஸ் (கார் இன்சூரன்ஸ், மெடிக்கல் இன்சூரன்ஸ்)
6 . யார் எவர் என்றல்லாம் பார்க்காமல், ஹலோ சொல்வது, புன்னகை செய்வது, கதவை திறந்து அடுத்தவருக்கு வழி விடுவது, ...மனிதாபிமானம்
7 . பதவியின் அதிகாரம் காண்பிக்காமல் சக ஊழியர்களுடன் பாரபட்சம் இன்றி பழகுவது
8 . கஸ்டமர் கேர் சேவையில் மிக பண்புடன் பேசுவது
9 . தபால் / கூரியர் சர்வீஸ்

இப்படி பல விஷயங்களை சொல்லலாம், இதில் குறையும் உண்டு, ஆனால் அது மிக குறைவு (நல்லதை மட்டும் எடுத்து கொள்வோம்). இதில் சில இந்தியாவிலும் உண்டு, ஆனால் நிறைய விஷயங்களை சரி செய்ய வேண்டி உள்ளது.

இதே போன்ற நல்ல விசயங்களோட இந்திய கலாச்சாரம் (பழைய) சேர்ந்தால், இந்தியா எப்படி இருக்கும்?? நடக்குமா ?? பார்க்கலாம்!!!

Saturday, December 12, 2009

என் சோக கதைய கேளு ....

ஒரு நாள் மாலை பொழுது, ஆபீஸில் இருந்து நேராக வீட்டுக்கு வராமல், முடி திருத்த சென்றேன் (என் நேரம்). நம்ம ஊரை போல் இல்லாமல் இங்கே (அமெரிக்க) ப்ளேடு நம்பர் சொல்ல வேண்டும். நான் விவரம் தெரியாமல் (இது வரை கத்தரி கட்டிங் தான்) 4 என்று சொல்ல, அவன் என்ன ஏது என்று கேட்காமல் வழித்து விட்டான். ரஜினி ஸ்டைலில் இருந்த என் முடி இப்போ, திருப்பதி பழனி மொட்டை .... ஒன்று அவனுடைய மொழி (ஸ்பேனிஷ்) தெரிய வேண்டும், இல்லை ஆங்கிலம் தெரிந்த நாவிதர் இடம் சென்றிருக்க வேண்டும்.... அவன் எனக்கு முடி வெட்டும் போது அடிக்கடி கண்ணாடியே பார்த்து வெட்டினான். எனக்கு முதலில் புரியவில்லை, ஆனால் கடைசியில் தான் தெரிந்தது அவன் தலை போல் எனக்கு வெட்டி விட்டான் என்று... நான் அவனுக்கு மூன்று டாலர் டிப்ஸ் கொடுத்தேன், ஏன் தெரியுமா, வெட்டியது வெட்டியாச்சு, இப்போ அவன் புண்ணியத்தில் 15*6 டாலர் மிச்சம், 6 மாசம் முடி வெட்ட வேண்டாம் என்ற சந்தோஷத்தில் .... இப்போது முன்னால் தமிழ் கதாநாயகர்கள் போல் ஒரு தொப்பியோடு உலா வருகிறேன் ....