Monday, December 20, 2010

கிரிக்கெட்டும் நானும்

அது டிவி வீட்டில் இல்லாத காலம், கிரிக்கெட் மேட்ச் பார்க்கணும்னா எங்காவது நண்பர் வீட்டில் போய் தான் பார்க்க வேணும். படிக்க போறேன்னு சொல்லிட்டு டிவி இருக்குற நண்பர் வீட்டுக்கு போய் sharjah cup பார்த்த காலம் அது. ஒழுங்கா படிச்சிருந்தா நல்ல உருபட்டிருக்கலாம், இப்போ இப்படி ஆணி புடுங்க வேண்டாம். அது மட்டும் இல்லாமல், பள்ளி முடிந்த பின் கிரிக்கெட், லீவு நாட்களில் கிரிக்கெட்னு விளையாடி தான் இந்த நிலைமை. படிப்பை விட கிரிக்கெட்ல தான் அதிக ஈடுபாடு. நல்ல வேலை காலேஜ் போன பிறகு கண்டிப்பா காலேஜ் டீம்ல சேர கூடாதுன்னு சொன்னத்தால, இந்த நிலமைக்காவது வந்திருக்கேன்.(இல்லனா மட்டும் பில் கேட்ஸ் ஆயிருப்பியான்னு கேக்குறீங்கன்னு தெரியுது)

கிரிக்கெட்ல மேட்ச் பிக்சிங் சொன்ன பிறகு நிறைய பேரு கிரிக்கெட் பார்க்கறதையே நிறுத்திட்டாங்க, நானும் அப்படி சொன்னேன், ஆனா அது அடுத்த மேட்ச் வரைக்கும் தான். இப்போவும் ராத்திரி முழிச்சிருந்து டெஸ்ட் மேட்ச் வரைக்கும் விடாம பாக்குறேன். என் மனைவி என்னை கை கழுவின விசயத்தில இதுவும் ஒன்னு(எப்படியும் போங்க).

நானும் நினைப்பேன், இனிமே இந்த (பாழாய் போனா) கிரிக்கட்டை பாக்கவே கூடாதுன்னு, முடியவே மாட்டேங்கிறது. இதுவரைக்கும் 2 ஆபிஸ் லேப்டாப் கிரிக்கட் பாக்க சுட்டி தேடினதுல வைரஸ் நோயால் பாதிச்சு செத்து கூட போச்சு. ரெண்டாவது லேப்டாப் சாகும் போது, புதுசா லேப்டாப் கொடுத்து கண்டிச்சு கொடுத்தாங்க, இதுக்கும் மேல வைரஸ் பிரச்சனைன்னு வந்தா லேப்டாப்பே கிடையாதுன்னு சொல்லிட்டாங்க. அதனால, சொந்த லேப்டாப்ல தான் பாக்குறது, மெக்காபீ புண்ணியத்தில எந்த பிரச்சனையும் இல்ல இதுவரைக்கும்.

வருடாவருடம் எங்க கம்பனில கிரிக்கட் மேட்ச் இருக்கும், முத ரெண்டு வருஷம் தவிர்க்க முடியாத காரணத்தால விளையாடல, சரி நடுவரா மட்டும் இருன்னாங்க. அதுக்கப்பறம் நடந்த மேட்ச்ல என்ன சேத்துகோங்கடான்னா, கிண்டல் பண்ணாதே உனக்கு விளையாட தெரியாது, நடுவரா மட்டும் இருன்னு, அபிஷியல் அம்பயர் ஆக்கிட்டாங்க. இங்கேயும் என் மனைவி தலைல தண்ணி தெளிச்சி விட்டுட்டாங்க (எக்கேடு கெட்டு போங்க).

இப்படியே என் கிரிக்கட் தொடர்பு விட்டு போகமாட்டேங்கிறது, இது என்றைக்குமே வெறுக்காது.

இவ்வளவு சொல்லியாச்சு, என் பேவரேட் யார்ன்னு சொல்ல வேண்டாமா, அடிதடி நாயகன் சேவாக் தான். பிடிக்காத அணி ஆஸ்திரேலியா, பிடிச்ச அணி சொல்லணுமா என்ன...  

No comments:

Post a Comment